இன்னொரு நடிகையும் விவாகரத்தா? கணவரை அன்ஃபாலோ செய்ததால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

திரையுலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் திடீரென விவாகரத்து செய்து வருவது அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து செய்தது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிஹாரிகாவும் தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற தமிழ் படத்திலும், ஒரு சில தெலுங்கு படத்தில் நிஹாரிகா நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெங்கட் சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து விட்டதாகவும் குறிப்பாக திருமண புகைப்படங்களை டெலிட் செய்து விட்டதாகவும் அதுமட்டுமின்றி அவரை அன்பாலோ செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



அதேபோல் வெங்கட் சைதன்யாவும் நிஹாரிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்து அவர் சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்து விட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் விரைவில் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெலுங்கு திரை உலகை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

'அருணாச்சலம்' ரிலீஸாகி 26 வருடங்கள்.. படத்தில் நடிக்காத குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' திரைப்படம் வெளியாகி 26 வருடங்களை நிறைவு பெற்றதை அடுத்து அந்த படத்தில் நடிக்காத குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை

'இங்கிலீஷ்காரன்' நடிகை மதுமிதாவை ஞாபகம் இருக்கிறதா? கணவர், குழந்தைகளுடன் க்யூட் புகைப்படங்கள்..!

 சத்யராஜ் நடித்த 'இங்கிலீஷ்காரன்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மதுமிதா கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஏப்ரல் 21 முதல், கனா காணும் காலங்கள்  தொடரின் சீசன் 2: ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு..! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 'கனா காணும் காலங்கள்'  தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது.

BMW பைக்கில் செம்ம ரைடு.. பிக்பாஸ் நடிகையின் மாஸ் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் பிஎம்டபிள்யூ பைக் ஓட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தோனியின் 'எல்ஜிஎம்' அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் 'எல்ஜிஎம்' என்ற தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.