சிரஞ்சீவியின் அடுத்த படமும் அஜித் படத்தின் ரீமேக்கா? 

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

அஜித் நடித்த ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படமும் அஜித்தின் இன்னொரு வெற்றி படத்தின் ரீமேக் தான் என தகவல் வெளியாகி உள்ளன.

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களின் ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் நடித்த ’கத்தி’ படத்தின் ரீமேக் படமான ‘கைதி நம்பர் 150’ என்ற படத்தில் நடித்த அவர், அதன் பின்னர் மோகன்லால் நடித்த ’லூசிபர்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ‘காட்பாதர்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் அஜித் நடித்த ’வேதாளம்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ‘போலோ சங்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் அஜித் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட்டான ‘விஸ்வாசம்’ படத்தின் ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ’கத்தி’ படத்தின் ரீமேக்கை இயக்கிய இயக்குனர் பிவி விநாயக், ‘விஸ்வாசம்’ ரிமேக்கையும் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.