சிரஞ்சீவி - நயன்தாராவின் 'காட்ஃபாதர்': மாஸ் டிரைலர் ரிலீஸ்

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் மலையாளத்தில் பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஆகிய மூன்று பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து இருப்பது இந்த படத்தின் சிறப்பு ஆகும்.

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரசியல்வாதி பிரம்மா என்ற கேரக்டரில் சிரஞ்சீவியும், சத்யபிரியா ஜெய்தேவ் என்ற கேரக்டரில் நயன்தாராவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பூரி ஜெகன்நாத் , சத்யதேவ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பிரபுதேவா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் சிரஞ்சீவியின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.