விஜய்சேதுபதியின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்', 'சிந்துபாத்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் அவர் தற்போது 'சங்கத்தமிழன்', 'லாபம்', உள்பட ஒருசில படங்களின் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக உள்ளார்.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'சயிர நரசிம்மரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றும் இந்த பயணத்தில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளதாகவும் ரத்னவேலு மேலும் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, தமன்னா, நாசர், பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ராம்சரண் தேஜா தயாரித்து வருகிறார். அமித் த்ரிவேதி இசையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Syeraa shooting completed !!Thanx to each n every member of Team Syeraa for their hard work n cooperation .A memorable journey indeed!! Movie has shaped out extremely well????. Kick started the DI too ?? @KonidelaPro @DirSurender pic.twitter.com/wjBZM3gZLE
— Rathnavelu ISC (@RathnaveluDop) June 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments