சிரஞ்சீவி பத்திரிகையாளரிடம் பேசிய ஆடியோ லீக்காகி வைரல்: அப்படி என்ன தான் பேசினார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
என்ன நல்லது செய்தாலும் ஊடகத்தினர் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ற தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வேதனையுடன் கூறிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா முதல் அலையின் போதும் சரி இரண்டாவது அலையின் போதும் சரி தனது சொந்த பணத்தில் ஏராளமான உதவிகளை செய்துள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. குறிப்பாக இந்த இரண்டாவது அலையின் போது அவர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஆக்சிஜன் வங்கி ஒன்றையும் தொடங்கினார் என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கிட்டத்தட்ட இந்த இரண்டாவது அலையில் மட்டும் ரூ.30 கோடி செலவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அவர் செய்யும் உதவிகள் குறித்த செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதாகவும் ஆனால் ஒரே ஒரு பத்திரிகை மட்டும் அது குறித்த செய்திகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து அவர் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது. இந்தத் தொலைபேசி உரையாடலின் ஆடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அரசியல் காரணங்களுக்காக தான் செய்யும் நல உதவிகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்று தனது மனவேதனையை கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments