சிரஞ்சீவி விடுத்த சவாலை ஏற்பாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தற்போது வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சினிமா நட்சத்திரங்கள் இடையே 'Be the Real Man' என்ற சேலஞ்ச் பரவி வருகிறது.
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கு இயக்குனர் ஒருவர் விடுத்த இந்த சேலஞ்சை அவர் செய்துவிட்டு அதன் பின்னர் அவர் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஆகியோர்களுக்கு பார்வேர்ட் செய்தார். இதனை அடுத்து ஜூனியர் என்டிஆர், மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு பார்வேர்ட் செய்தார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவியும் இந்த சேலஞ்சை ஏற்று தனது வீட்டை சுத்தம் செய்து, சமையல் செய்து, தனது குடும்பத்தினர்களுக்கு பரிமாறும் வேலைகள் செய்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்போது இந்த சேலஞ்சை அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விடுத்துள்ளார். சிரஞ்சீவியின் இந்த 'Be the Real Man' என்ற சேலஞ்ச்சை ஏற்று ரஜினிகாந்த் தனது வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Here it is Bheem @tarak9999 నేను రోజు చేసే పనులే...ఇవ్వాళ మీకోసం ఈ వీడియో సాక్ష్యం. And I now nominate @KTRTRS & my friend @rajinikanth #BeTheRealMan challenge. pic.twitter.com/y6DCQfWMMm
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments