கீர்த்தி சுரேஷின் கழுத்தை பிடித்து நெரிக்கும் சிரஞ்சீவி.. படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, நடிகை கீர்த்தி சுரேஷ் கழுத்தை பிடித்து நெரிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் ’போலோ சங்கர்’. அஜீத் நடித்த ‘வேதாளம்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அஜித் வேடத்தில் சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன் வேடத்தில் தமன்னா, லட்சுமி மேனன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படப்பிடிப்பின் போது, திடீர் என சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் கழுத்தை பிடித்து நெரித்தார். அப்போது அருகில் தமன்னாவும் இருந்தார். காமெடிக்காக சிரஞ்சீவி செய்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout