தொடங்குவதற்கு முன்பே விஜய் படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
- IndiaGlitz, [Thursday,January 28 2016]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படம் ரிலீஸுக்கு முன்னர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் குறித்து சில சர்ச்சகைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஒருசில அரசியல் கட்சிகள் இந்த படத்தை தடை செய்ய பல்வேறு போராட்டங்களை நடத்தின. பின்னர் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளையும் கடந்து 'கத்தி' திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் 'கத்தி' படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த ரீமேக் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நரசிம்ம ராவ் என்பவர் இப்படத்தின் கதை த்ன்னுடையது என்று பிரச்சனையை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு எதிராக அவர் தொடரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழிலும் 'கத்தி' படத்திற்கு எதிராக தஞ்சாவூரை சேர்த அன்பு ராஜசேகர் என்பவர் இந்த படத்தின் கதை தன்னுடைய குறும்படம் ஒன்றின் கதை என்று வழக்கு தொடர்ந்து பின்னர் அந்த வழக்கை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.