எனக்கு கிடைத்த 'ரூபாய்'க்கு அமிதாப் தான் காரணம். சின்னிஜெயந்த்

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சின்னி ஜெயந்த் தற்போது தனுஷின் 'தொடரி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கி வரும் 'ரூபாய்' என்ற படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

'ரூபாய்' படத்தில் பணத்திற்கு அடிமையாகும் ஒரு வயதான கேரக்டரில் அவர் நடித்திருப்பதாகவும் இந்த படத்தின் கெட்டப், அமிதாப் நடித்த 'பிக்கு' படத்தின் பாதிப்பால் வந்தது என்றும் தனது கேரக்டர் மெருகேறும் வகையில் அமைந்ததற்கு அமிதாப்பே காரணம் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தில் சின்னிஜெயந்த் மகளாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனுஷின் 'தொடரி' படத்தில் ரயில்வே கண்ட்ரோல் ரூம் அதிகாரியாக நடித்திருப்பதாகவும், தனுஷ்-கீர்த்தி சுரேஷ் காதலுக்கு சப்போர்ட் செய்யும் இந்த கேரக்டர் தனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

சென்னை படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ரன்னிங் டைம்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படம் U/A சர்டிபிகேட் பெற்றது...

சித்தார்த்துக்கு ஜோடியாகும் கமல் நாயகி

சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கு பின்னர் அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளது...

'கபாலி' ரசிகர்களுக்கு நாளை இன்னொரு இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் நாளை வெளிவரவுள்ளதால் 'நெருப்புடா...

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' சென்சார் தகவல்கள்

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கோலிவுட்டில் மீண்டும் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன அவர் தற்போது 'ஜாக்சன் துரை'...