சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சின்னத்தல: இந்த ஆண்டாவது கோரிக்கை நிறைவேறுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் கிரிக்கெட் ரசிகர்களால் ’சின்ன தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சூர்யா தனது விருப்பத்துக்குரிய நடிகர் என பல பேட்டிகளில் கூறி உள்ள சின்னத்தல சுரேஷ் ரெய்னா நேற்றைய பிறந்தநாள் வாழ்த்து பதிவில் ’இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார். இந்த ட்விட்டை சூர்யா மற்றும் சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உங்களது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் எந்த நடிகர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று செய்தியாளர்கள் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்டபோது அவர் சற்றும் யோசிக்காமல் ’சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். அதுமுதல் சுரேஷ் ரெய்னாவின் இந்த ஆசையை சூர்யா விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த ஆண்டாவது அந்த ஆசை நிறைவேறுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Wishing you a very Happy Birthday @Suriya_offl , an idol to so many. May the coming year add wisdom, warmth and success to your life ?? #HappyBirthdaySuriya pic.twitter.com/cFnBNQgoph
— Suresh Raina???? (@ImRaina) July 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com