மருத்துவத்துறை ஊழலை தோலுரிக்கும் 'சின்னஞ்சிறு கிளியே'

  • IndiaGlitz, [Saturday,September 25 2021]

மருத்துவத்துறையில் நடைபெறும் மாபெரும் ஊழலை வெளிப்படுத்தும் படமாக சின்னஞ்சிறு கிளியே என்ற திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

குழந்தைகளின் எலும்பு மஜ்ஜையை வைத்து மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை அம்பலப்படுத்தும் கதையை இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டி இயக்கியுள்ளார். மருத்துவத்துறை பணத்திற்காக பொதுமக்களை எப்படி பழிவாங்குகிறது என்பதை தனது அதிரடியான திரைக்கதை மூலம் இந்த படத்தில் அவர் கூறி உள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன் படம் முழுவதும் வேட்டி சட்டையுடன் கம்பீரமாக நடித்திருக்கிறார் என்பதும் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாயகி சான்ட்ரா நாயர் மற்றும் தாத்தாவாக நடித்திருக்கும் கவிஞர் விக்ரமாதித்தன் உள்பட அனைவரும் படத்தின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது. மகாதேவன் இசையில் பாடல்கள் சிறப்பு மொத்தத்தில் மருத்துவத் துறையில் உள்ளவர்கள் நோயைக் குணப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கபட்டிருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களே புதுவகை நோயை உண்டாக்கி அதற்கான மருந்துகளை உற்பத்தி செய்து வியாபாரம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அதிர்ச்சியான உண்மைகளை இந்த படம் பதிவு செய்துள்ளது. இந்த படம் மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி தோலுரிக்கும் படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.