தலைவி vs தலைவா: 'சின்னத்தல' உடன் பிக்பாஸ் ஷிவானி!

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

கிரிக்கெட் ரசிகர்களால் ‘சின்னத்தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் போட்டியின் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை வந்துள்ளார் என்பது தெரிந்ததே. அவருடன் திரையுலக பிரபலங்கள் பலர் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவாங்கி சின்னத்தலயுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷிவாங்கியை அடுத்து பிக்பாஸ் ஷிவானியும் தற்போது சின்னத்தலயுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கும் லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டு ஒருசில மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும், ‘சின்னத்தல கூட மாஸ் காட்டுறீங்க’ ;நீங்க வேற மாதிரி’, ’தலைவி vs தலைவா’ போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவராத்திரி நாளில் ஆண் குழந்தைக்கு தாயான எருமை சாணி ஹரிஜா… குவியும் வாழ்த்து!

பிரபல யூடியூப் சேனலான எருமை சாணி மூலம் புகழ் பெற்றவர் ஹரிஜா.

கபாலி பட நடிகையின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கபாலி”. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே

சின்னவயசு கனவு? புளியமரத்தில் தொங்கி விளையாடும் முன்னணி நடிகர்!

“பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தற்போது தமிழின் முன்னணி நடிகராக அறியப்படுகிறார்

ஒட்டகத்துடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ!

தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்து இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

திருநங்கை MLA? அரசியலில் திருநங்கைகளின் நிலைமை குறித்த பிரத்யேக பேட்டி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார்