ஹர்பஜன்சிங் நடித்த 'பிரெண்ட்ஷிப்' ரிலீஸ்: தமிழில் வாழ்த்து கூறிய 'சின்னத்தல'
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததில் இருந்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் ஒருசில டுவிட்டுக்களை செய்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு தமிழ் திரைப்படமான ‘பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் பிக்பாஸ் லாஸ்யா உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை ஹர்பஜன்சிங் நடித்த ‘பிரெண்ட்ஷிப்’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து அவருடன் கிரிக்கெட் விளையாடிய சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ’சின்ன தல’ என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஜ்ஜி பா ஹர்பஜன்சிங், என் அண்ணாத்த! ‘பிரெண்ட்ஷிப்’ ட்ரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. ‘பிரெண்ட்ஷிப்’ டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க’ என்று பதிவு செய்துள்ளார்.
சுரேஷ் ரெய்னாவின் இந்த பதிவுக்கு ’மிக்க நன்றி சிஎஸ்கே சிங்கம் சுரேஷ்ரெய்னா அவர்களே’ என நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சதீஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடடே... மிக்க நன்றி #CSKசிங்கம் @ImRaina அவர்களே ???????????? https://t.co/p4YYndn187
— Sathish (@actorsathish) September 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com