close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் 'சின்ன மருமகள்' சீரியல் நடிகை? பெரும் எதிர்பார்ப்பு..!

Tuesday, September 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சின்ன மருமகள்’ சீரியலில் நடித்து வரும் நடிகை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகவும் இதற்கான புரமோ வீடியோ தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சின்ன மருமகள்’ சீரியலில் நடிக்கும் நடிகை பானுமதி இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடன கலைஞரான பானுமதி பல மேடையில் நடனமாடி உள்ளார் என்பதும் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே ஒவ்வொரு சீசன் இன்னும் ஒரு சில சீரியல் நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் எட்டாவது சீசனில் நடிகை பானுமதி கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment