கதறி அழுத சின்மயி: காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சின்மயி தமிழகத்தில் 'மீடூ' என்ற ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்த நிலையில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களின் எண்ணிக்கைக்கு சம அளவில் அவருடைய மீடூ குற்றச்சாட்டை எதிர்க்கவும் ஒரு கூட்டம் உள்ளது
இந்த நிலையில் 'மீடூ' குறித்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி பேட்டி ஒன்றில் தெரிவித்தபோது, 'இதுவொரு கீழ்த்தரமான விளம்பர யுக்தி. என்றைக்கோ நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியது அனைத்தையும் வெளியே சொல்வது தேவையா? இந்த மீடு குற்றச்சாட்டால் சாதிப்பது என்ன? அது குற்றம் சுமத்துபவரின் குடும்பத்தை தான் பாதிக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இதுவொரு கேவலமான செய்கை. நான் ஒரு பெண்ணியவாதிதான் ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு என்றைக்கும் ஆதரவு தரமாட்டேன்' என்று கூறியுள்ளார்.
செளகார் ஜானகியின் இந்த பேட்டி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய சின்மயி, 'செளகார் ஜானகியின் இந்த பேட்டியை பார்த்து நான் கதறி அழுதேன். குறிப்பாக 'நடந்தது நடக்காதது' என்பது என மனதை புண்படுத்திவிட்டது. மீடு குற்றவாளிகளுக்கு இன்னும் எத்தனை பேர் சினிமாவுலகிலேயே ஆதரவு தருவார்கள் என்று பார்ப்போம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்த பேட்டிக்கு கருத்து கூறிய நடிகை சமந்தா, 'துரதிஷ்டவசமாக செளகார் ஜானகி அவர்கள் மீடுவை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த பேட்டியை அளித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
For those who dont know what the Sowcar madam and YGM sir interview is - THIS is the one.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 29, 2018
If I have to be honest, I did cry after watching it. “Nadandhadhu and Nadakkadhadhu”
How MANY from the industry have shielded and protected predators? And the MeToo jokes - Slow clap. https://t.co/KZoGeCHDuN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments