நான் ரொம்ப டயர்டு ஆகிவிட்டேன், என்னால முடியலை: ராதாரவி குறித்து சின்மயி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் மற்றும் புதுவையில் அவர் தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ராதாரவி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நயன்தாரா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? என்றும் உதயநிதிக்கும் அவருக்கும் என்ன உறவு என்றும் கேள்வி எழுப்பி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டரில் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘இந்த மனிதராலும் இவருடைய பேச்சாலும் நான் உண்மையிலேயே ரொம்ப டயர்ட் ஆகி விட்டேன். என்னால் இதற்கு மேல் முடியவில்லை. வெளிப்படையாகவே இவர் ஆபாசமாக பேசுகிறார். இவரை எப்படி அந்த கட்சி நட்சத்திர பேச்சாளராக எடுத்தது என்பது தெரியவில்லை.
ஆ ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும், எல்லோரும் மோசமாக பேசிவருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்துவிட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். சின்மயி பதிவு செய்த இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Honestly I am sick and tired of this man and his abuse.
— Chinmayi Sripaada (@Chinmayi) March 31, 2021
This man is openly abusive, a molester, a harasser!! Why would a party hire him as a star campaigner?
DMKs A Raja or Radha Ravi - they’re all the same kinda abusive men that we have voted for and made powerful. https://t.co/4qZ3s87bWD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments