ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாக தடை செய்வது தவறு. பிரபல பாடகி

  • IndiaGlitz, [Tuesday,January 10 2017]

தமிழகம் முழுவதும் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு. தமிழ் அமைப்புகள், அரசியல்வாதிகள், திரையுலகினர், மாணவர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி ஜல்லிக்கட்டு குறித்த தனது கருத்தை கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா அமைப்பு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழக கலாசாரத்துடன் இணைந்தது என்றும், ஜல்லிக்கட்டு நடத்தும்போது விதிகளை கடுமையாக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டை தடை செய்வது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பீட்டா அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் அவ்வாறு தான் கூறியதாக ஒருசில பத்திரிகைகள் பொறுப்பின்றி செய்தி வெளியிட்டுள்ளதாகவும், சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

'ராஜா ரங்குஸ்கி' கதாநாயகி மாற்றம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்கவுள்ள அடுத்த படம் ''ராஜா ரங்குஸ்கி''

30 ஆண்டுகளுக்கு பின் விஜய் அம்மாவிடம் வாழ்த்து பெற்ற பிரபல நடிகர்

கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகராக இருந்த ரகுமான், கடந்த சில வருடங்களாக வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக உள்ளார்.

ஜல்லிக்கட்டு களத்தில் குதித்தார் தனுஷ்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

விஜய் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்களா?

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் பல்கேரிய மற்றும் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பொங்கல் திருவிழாவிற்கு பின்னர் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கங்கை அமரனுக்கு கேரள அரசின் மிகப்பெரிய விருது.

கேரள தேவசம் போர்டு மற்றும் கேரள சுற்றுலாத்துறை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது