டைம் வேஸ்ட், இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது: பிரபல நடிகர் குறித்து சின்மயி

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது, இவர்களை திருத்த முயற்சித்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட், எனவே அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என பிரபல நடிகர் குறித்து பாடகி சின்மயி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்களின் போராட்டம் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஒய்,.ஜி. மகேந்திரன் கூறியபோது ‘விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவும் பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறினார்

ஒய்.ஜி.மகேந்திரன் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் இதுகுறித்து சின்மயி கூறியபோது ’பொதுவாக இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் நாம் கண்டும் காணாமல் விட்டு விட வேண்டும் என்றும் இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது என்றும் அவ்வாறு முயற்சித்தால் அது காலவிரயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சின்மயியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களின் ஆதரவு குவிந்து வருகிறது.
 

More News

வீட்டுக்கு வா என அழைத்த காதலன்; நம்பி போன காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்!

வீட்டுக்கு வா என அழைத்த காதலனின் வீட்டிற்கு அவருடைய வார்த்தையை நம்பி போனால் 20 வயதுப் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யாவுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள 38வது திரைப்படமான 'சூரரைப்போற்'று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

திருமணமான சில நாட்களில் 100 பவுன் நகைகளுடன் காதலனுடன் மாயமான மணப்பெண்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரு சில நாட்களில் காதலனுடன் 100 பவுன் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக நாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதுமா? ஹெச்.ராஜா

குடியுரிமை சட்டம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், 'வாக்கு வங்கிக்காக குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

டி.ராஜேந்தருக்கு கிடைத்த அசத்தலான வெற்றி!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது.