வைரமுத்துவின் மகளிர் தின வாழ்த்துக்கு சின்மயி ரியாக்சன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறினர் என்பதும் சமூக வலைதளங்களில் பலர் மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து மகளிர் தினம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்த நிலையில் பாடகி சின்மயி அதே கவிதை வடிவில் பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளிர் தின வாழ்த்து குறித்து கவிப்பேரரசர் வைரமுத்து கூறியதாவது:
மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்
உலக
மகளிர் திருநாள் வாழ்த்து
வைரமுத்துவின் இந்த வாழ்த்துக்கு பாடகி சின்மயி கூறியதாவது:
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.
இந்த இரண்டு பதிவுகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
— Chinmayi Sripaada (@Chinmayi) March 8, 2023
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.
I can’t get over how he speaks about women’s lib and safety. The gall. https://t.co/E1671ftmn7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout