சமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

சிம்பு த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 வருடங்கள் ஆனதை அடுத்து சிம்பு மற்றும் த்ரிசாவின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிகை சமந்தா அறிமுகமாகினார் என்பது இதுதான் அவருக்கு முதல் படம் என்பதும் தெரிந்ததே. இதனால் சமந்தா அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தாவின் 10 வருட திரையுலக வாழ்க்கை குறித்து அவருக்காக பல படங்களில் பின்னணி குரல் கொடுத்த பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

சமந்தா குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன், மீண்டும் கூறுகின்றேன். அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திலேயே ப்ரதியூஷா என்ற அறக்கட்டளையைத் தொடங்கி சமூக சேவை செய்வதை கண்டு நான் வியக்கிறேன்.

சமூக வலைதளங்களில் பலர் சமந்தா ஒரு திருமணமான பெண். அதனால் அவர் மட்டும் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இது போன்ற விஷயங்களை ஒரு முன்னணி நடிகையாக அவர் உடைக்கிறார்.

பெரும்பாலான இந்தியர்களிடம் ஒரு நடிகை திருமணமான உடனே நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நிச்சயமாக இந்த விதி நடிகர்களுக்கு பொருந்தாது. நடிகர்களை பொறுத்தவரை ‘வேலை’ என்கிற விஷயம் நடிகை என்று வரும்போது ‘நீங்கள் எப்படி இன்னும் வேலை செய்கிறீர்கள்?’ என்ற கேள்வி எழுகின்றது.

சமந்தாவைப் பொறுத்தவரை அவர் விரும்பும் வேலையைச் செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரு சமூகத்தில் சிறப்பாக வாழ்வதே ஒரு பெரிய சாதனை தான். அவருடைய உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்று விரும்புகிறேன். அவர் கடுமையாக உழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்''