இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை எப்படி நம்புவது? கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கினாரா சின்மயி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆதரவளித்தார். இதுகுறித்து பாடகி சின்மயி மறைமுகமாக கமல்ஹாசனை விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக போராடியவர்கள், தற்போது அவர்களை தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட்டம் வைத்து விட்டோம். இந்தியர்களே நாம் யார் மீது கவனம் செலுத்த வேண்டும்? ஒரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் மீதா? அல்லது குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா? என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கமலஹாசனின் இந்த பதிவுக்கு பாடகி சின்மயி கூறிய போது, ‘தமிழ்நாட்டில் ஒரு பாடகி பாலியல் துஷ்பிரயோகம் செய்பவரின் பெயரை சொன்னதற்காக ஐந்து ஆண்டு தடை செய்யப்பட்டார், அதுமட்டுமின்றி அவருக்கு மரியாதையும் கிடைத்தது. பெண்களின் பாதுகாப்பிற்காக பேசும் இதுபோன்ற அரசியல்வாதிகளை எப்படி நம்புவது? அவர்கள் தங்கள் கண் முன் நடக்கும் துன்புறுத்தலை புறக்கணிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Today marks 1 month of protests by athletes of the wrestling fraternity. Instead of fighting for national glory, we have forced them to fight for personal safety.
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2023
Fellow Indians ,who deserves our attention, our national sporting icons or a politician with an extensive criminal…
Needless to say there is soooo much anger.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2023
So many Kamal Haasan supporters ask me the same *rape apologist - survivor shaming* questions that those opposing our Indian wrestlers have said. The playbook to shame women who name powerful molesters is the exact same.
DMK - BJP -… pic.twitter.com/0UEZtj9MCD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments