உங்களுக்கு தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பு... நடிகையின் தற்கொலை குறித்து சின்மயி காட்டமான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜூனியர் நடிகை ஒருவரின் தற்கொலை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பாடகி சின்மயி ’உங்களுக்கு தான் தெரியுமே, இந்திய சட்ட அமைப்பை பற்றி’ என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
‘புஷ்பா’ படத்தில் நடித்த ஜெகதீஷ் என்பவர் ஜூனியர் நடிகை ஒருவரை பாலியல் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த ஜூனியர் நடிகை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் சின்மயி தனது சமூக வலைதளத்தில் இது குறித்து காட்டமாக பதிவு செய்துள்ளார். ’இந்தியாவின் முதல் பாலியல் துன்புறுத்தல் நிவர்த்தி குழுவை கொண்ட அமைப்புதான் தெலுங்கு திரை உலக பிலிம் சேம்பர். இறந்து போன அந்த நடிகைக்கு தனது உரிமைகள் பற்றிய தெரிந்திருக்கும் என்றால், அவருக்கு சட்ட ரீதியான உதவி கிடைத்திருந்தால், அவர் இந்நேரம் பாதுகாப்பாக இருந்திருப்பார்.
ஒரு பெண்ணை பிளாக்மெயில் செய்வது எளிது என ஒரு ஆண் நினைத்ததால் தான் இன்று அந்த பெண் இறந்திருக்கிறார். நமது சமூகம் பெண்கள் குறித்து தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்த வழக்கு இன்னும் பல ஆண்டுகள் நடக்கும், அந்த நபர் ஜாமீன் கிடைத்து நாளையே வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு தான் தெரியுமே இந்திய சட்ட அமைப்பை பற்றி’ என்று தன்னுடைய கோபத்தை ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout