இத்தனை வருடம் மெளனமாக இருந்தது ஏன்? சின்மயி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒருசிலர் சின்மயி இதனை விளம்பரத்திற்காக கூறுவதாகவும், இத்தனை வருடம் இதனை கூறாமல் இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது சின்மயி வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.
சுவிஸ் நாட்டில் 'வீழ மாட்டோம்' என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது அந்த நிகழ்ச்சியை நடத்திய சுரேஷ் வீட்டில் தான் நானும் எனது தாயாரும் தங்கியிருந்தோம். எனக்கு ஜெர்மன் மொழி தெரியும் என்பதால் அவர் பேசும் ஜெர்மன் எனக்கு நன்றாக புரியும். அவர் தன்னுடைய சொந்த மகளையே தனியாக வைரமுத்து தங்கியிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று ஜெர்மனில் கூறினார். அது எதற்கு என்று அப்போது எனக்கு தெரியவில்லை
மேலும் இந்த சம்பவம் நடந்தபோது எனக்கு விவரம் தெரியாத வயது. மேலும் என்னை பற்றிய முடிவுகள் அனைத்துமே என் தாயார் தான் எடுத்தார். இந்த விஷயத்தை வெளியே கூற வேண்டாம் என்று முடிவு எடுத்ததும் அவரே. மேலும் 2004ஆம் ஆண்டில் மூன்று சேனல்கள் மட்டுமே இருந்தது. சன் டிவி அலுவலகத்திற்கு சென்று 'வைரமுத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறினால் என்ன நடந்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
மேலும் இந்த விஷயத்தை நான் விளம்பரத்திற்காக தற்போது கூறுவதாக ஒருசிலர் சொல்கின்றனர். இன்று நான் ஒன்பது மொழிகளில் பாடி, அமெரிக்க அரசால் கெளரவம் பெற்றுள்ளேன். இதற்கு மேல் எனக்கு எந்தவித விளம்பரமும் தேவையில்லை, அவசியமும் இல்லை. இந்த அளவுக்கு புகழ் பெற்று இருக்கும்போதே என்னிடம் பல கேள்விகள் கேட்கின்றனர். இதனை நான் 15 வருடங்களுக்கு முன் கூறியிருந்தால் என் கருத்தை இந்த சமூக ஏற்று கொண்டிருக்குமா?
நிர்பயா படுகொலைக்கு பின்னரே பெண்கள் மீதான் பாலியல் குற்றங்கள் குறித்து தைரியமாக பலர் பேச முன்வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அனைவரும் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறி வருவதை அடுத்தே நானும் எனக்கு நிகழ்ந்ததை கூறியுள்ளேன். இது விளம்பரத்திற்காக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, உண்மையாக நடந்த ஒரு சம்பவம் என்று சின்மயி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com