ஒரு வருடத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் சின்மயி
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி கடந்த ஆண்டு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவியின் இந்த நடவடிக்கையை அடுத்து சின்மயி நீதிமன்றம் சென்று மீண்டும் டப்பிங் யூனியனில் சமீபத்தில் இணைந்தார். இந்தப் பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வருடமாக எந்த தமிழ் படத்திற்கும் அவர் டப்பிங் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அதாவது ஒரு வருடத்துக்குப் பின் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’ஹீரோ’ படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுகாக சின்மயி டப்பிங் செய்துள்ளார். இதற்காக அவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி கூறியுள்ளார்
இதுகுறித்து சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘டப்பிங் யூனியனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு வருடத்துக்கு மேல் தான் தமிழ் படங்களுக்கு டப்பிங் செய்யாமல் இருந்ததாகவும், தற்போது தனக்கு வாய்ப்பு அளித்த மித்ரன் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார் மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு உண்மையான ஹீரோவாக தெரிவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
After an uphill battle and after a year and some days - I dub in a Tamil film (Not counting Oh Baby’s dubbed version)
— Chinmayi Sripaada (@Chinmayi) December 13, 2019
I know how P S Mithran worked around with the Dubbing Union and Mr. Radha Ravi
Thank you, Mithran. You and the Producer are my heroes :) @Psmithran https://t.co/vUpeQAVwGE