இரட்டை குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய சின்மயி.. குடிகார டிரைவரால் ஏற்பட்ட விபரீதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சின்மயி தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஆட்டோ டிரைவர் மோதி விட்டதாகவும் அந்த டிரைவர் குடி போதையில் இருந்ததாகவும் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி. இவருக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் நமது சமூக வலைதளத்தில் ’குழந்தைகளுடன் தான் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், குழந்தைகள் இருவரும் பின் சீட்டில் இருந்ததாகவும், ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் தன்னுடைய காரில் மோதி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னுடைய காரின் முன்பகுதி சேதம் அடைந்தது என்றும் மோதிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டதாகவும், ஒரு நல்ல மனிதர் அந்த ஆட்டோவை துரத்தி பிடிக்க நினைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க மனமில்லை என்றும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறிய சின்மயி, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து தனக்கு நிம்மதி ஏற்பட்டதாகவும், தயவு செய்து குடித்துவிட்டு யாரும் வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.
A piss drunk auto driver rammed against our car so badly that the frontal left side was smashed, at Abhiramapuram around 4 PM today.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 1, 2023
My kids were seated on the rear seat. And stepped out safe with our nanny. I didn’t realise the extent of damage from the photo as I returned…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments