இரட்டை குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய சின்மயி.. குடிகார டிரைவரால் ஏற்பட்ட விபரீதம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

பாடகி சின்மயி தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஆட்டோ டிரைவர் மோதி விட்டதாகவும் அந்த டிரைவர் குடி போதையில் இருந்ததாகவும் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி. இவருக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் நமது சமூக வலைதளத்தில் ’குழந்தைகளுடன் தான் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், குழந்தைகள் இருவரும் பின் சீட்டில் இருந்ததாகவும், ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் தன்னுடைய காரில் மோதி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தன்னுடைய காரின் முன்பகுதி சேதம் அடைந்தது என்றும் மோதிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டதாகவும், ஒரு நல்ல மனிதர் அந்த ஆட்டோவை துரத்தி பிடிக்க நினைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க மனமில்லை என்றும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறிய சின்மயி, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து தனக்கு நிம்மதி ஏற்பட்டதாகவும், தயவு செய்து குடித்துவிட்டு யாரும் வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

More News

பிக்பாஸ் நடிகருக்கு பிறந்த 2வது குழந்தை.. க்யூட் புகைப்படம் வைரல்..!

தமிழ் திரை உலகின் நடிகரும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

ராஷ்மிகா அம்மாவும் ஹீரோயின் போல தான் இருக்காங்க.. வைரல் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் 'நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் அம்மாவும்  ஹீரோயின் மாதிரி தான் இருக்கிறார் என்று ரசிகர்

டிரைலர் பாத்ததும் தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்: 'லியோ' டிரைலர் பார்த்த பிரபலம்..!

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து

வழக்கம்போல் முதல் 5 நிமிட காட்சிகள்.. விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் வீடியோ..!

விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவான 'ரத்தம்' என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

முதல்முறையாக இணையும் 'விக்ரம்' நடிகர்.. 33 வருடங்களுக்கு பின் இணையும் அமிதாப்.. 'தலைவர் 170' சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' என்ற படத்தின் அறிவிப்புகள் நேற்று முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன.  நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும்