close
Choose your channels

'லியோ'வுக்கு முன் 3 படங்களில் த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த சின்மயி.. மூன்றுமே சூப்பர் ஹிட்..!

Saturday, October 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார் என்பதும், அவருக்கு இந்த படத்தில் பின்னணி குரல் கொடுத்தது பாடகி சின்மயி என்பதையும் பார்த்தோம். மேலும் இதற்காக அவர் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகிய இருவருக்கும் தனக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.

கடந்த சில வருடங்களாகவே த்ரிஷாவுக்கு வேறொரு பிரபல டப்பிங் கலைஞர் குரல் கொடுத்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது த்ரிஷாவுக்கு சின்மயி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே த்ரிஷாவுக்கு மூன்று படங்களில் சின்மயி பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும், அந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் என்பதும் தெரியவந்துள்ளது.

முதல் முறையாக த்ரிஷாவுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்திற்கு த்ரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்தார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ’என்றென்றும் புன்னகை’ திரைப்படத்திலும், 2018 ஆம் ஆண்டு ’96’ திரைப்படத்திலும் த்ரிஷாவுக்கு சின்மயி பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

தற்போது ஐந்து வருடங்கள் கழித்து லியோவுக்கும், அவர் பின்னணி கொடுத்துள்ள நிலையில் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment