ஆதரவாக சின்மயி கணவர்.. எதிர்ப்பாக விஷ்ணு விஷால் மனைவி.. என்ன நடக்குது சமந்தா விஷயத்தில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய மருத்துவ குறிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு ஒரு மருத்துவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் கடுமையான சொற்களை பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை சமந்தா இதற்கு தனது நீண்ட விளக்கத்தை அளித்துள்ள நிலையிலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. சமந்தாவின் மருத்துவ குறிப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகி சின்மயி கணவர் ரவீந்தர், ‘சமந்தாவின் மருத்துவ குறிப்பு குறித்து மருத்துவர்களிடம் விவாதம் செய்யலாம் என்றும் மருத்துவ உலகில் ஒரு மருத்துவர் கூறியதை இன்னொரு மருத்துவர் மறுக்கும் நிலை இருக்கும் நிலையில், சாதாரண மருத்துவ அறிவு கொண்ட சமந்தாவின் கருத்துக்களுக்கு ஏன் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா இதுகுறித்து கூறிய போது ’டாக்டரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்கத்தக்கது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com