சுசி லீக்ஸ் குற்றச்சாட்டுக்கு சின்மயி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒருசிலர் சுசிலீக்ஸில் சின்மயி மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுமாறு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் விளக்கமளித்துள்ள சின்மயி, 'கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ் சமுதாயத்தில் கொச்சை மனம் கொண்ட சிலர் சுசித்ரா கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுமாறு தமிழில் உள்ள அனைத்து கொச்சை வார்த்தைகளின் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றுதான். இந்த குற்றச்சாட்டுக்களை அப்போதே நான் மறுத்திருந்தேன். சுசித்ரா மனநிலை சரியில்லாமல் அவ்வாறு பேசுவதாக தெரிவித்திருந்தேன். அப்போதே இதுகுறித்து வருத்தம் தெரிவித்து சுசித்ரா இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த இமெயிலை நான் பகிர்ந்து கொண்டு என்னை குற்றமற்றவற்றவராக காட்டிக்கொள்ள எனக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால் தனிப்பட்ட முறையில் வந்த இமெயிலை பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.
இந்த நிலையில் சுசித்ரா கணவர் கார்த்திக் டுவீட் ஒன்றில் சின்மயி மீது சுசித்ரா சாட்டிய குற்றச்சாட்டில் உண்மையில்லை, மனநிலை சரியில்லாத நேரத்தில் சுசித்ரா சுமத்திய குற்றங்கள் அவை' என்று விளக்கமளித்தார். அந்த டுவீட்டை நானும் பகிர்ந்துள்ளேன். நான் என் தொழிலில் முன்னேற என்னென்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தேன் என்று கேள்வி எழுப்பிய தமிழ் உள்ளங்களுக்கு இதுவே எனது பதிலாகும்
உண்மை ஒருநாள் கட்டாயம் வெளியே வரும் என்ற நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கையும் வீணாகவில்லை என்று சின்மயி விளக்கமளித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com