சுசி லீக்ஸ் குற்றச்சாட்டுக்கு சின்மயி விளக்கம்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒருசிலர் சுசிலீக்ஸில் சின்மயி மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுமாறு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் விளக்கமளித்துள்ள சின்மயி, 'கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ் சமுதாயத்தில் கொச்சை மனம் கொண்ட சிலர் சுசித்ரா கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுமாறு தமிழில் உள்ள அனைத்து கொச்சை வார்த்தைகளின் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றுதான். இந்த குற்றச்சாட்டுக்களை அப்போதே நான் மறுத்திருந்தேன். சுசித்ரா மனநிலை சரியில்லாமல் அவ்வாறு பேசுவதாக தெரிவித்திருந்தேன். அப்போதே இதுகுறித்து வருத்தம் தெரிவித்து சுசித்ரா இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த இமெயிலை நான் பகிர்ந்து கொண்டு என்னை குற்றமற்றவற்றவராக காட்டிக்கொள்ள எனக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால் தனிப்பட்ட முறையில் வந்த இமெயிலை பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.

இந்த நிலையில் சுசித்ரா கணவர் கார்த்திக் டுவீட் ஒன்றில் சின்மயி மீது சுசித்ரா சாட்டிய குற்றச்சாட்டில் உண்மையில்லை, மனநிலை சரியில்லாத நேரத்தில் சுசித்ரா சுமத்திய குற்றங்கள் அவை' என்று விளக்கமளித்தார். அந்த டுவீட்டை நானும் பகிர்ந்துள்ளேன். நான் என் தொழிலில் முன்னேற என்னென்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தேன் என்று கேள்வி எழுப்பிய தமிழ் உள்ளங்களுக்கு இதுவே எனது பதிலாகும்

உண்மை ஒருநாள் கட்டாயம் வெளியே வரும் என்ற நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கையும் வீணாகவில்லை என்று சின்மயி விளக்கமளித்துள்ளார்

 

More News

'96' படத்திற்காக த்ரிஷாவுக்கு கிடைத்த பிரமாண்டமான வாழ்த்து

சமீபத்தில் வெளியான '96' திரைப்படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகரையும் அவரவர்களுடைய மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியது. ஒரு காதல் கதையை இதைவிட அற்புதமாகவும் டீசண்ட்டாகவும் எடுக்க வாய்ப்பில்லை

அசைக்க முடியாத ஆதாரம் உள்ளது: சின்மயி குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து பதில்

கடந்த சில நாட்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்பு செய்தியாகவும், விவாத பொருளாகவும்

அஜித் விஜய் ரசிகர்களுக்கான ஆயுதபூஜை விருந்து

தளபதி விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அக்டோபர் 26ல் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு 'ஜூங்கா', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' திரைப்படங்கள் வெளியாகியுள்ளது

பிரியதர்ஷனின் அடுத்த படத்தில் 'விஸ்வரூபம்' நாயகி

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இந்த ஆண்டு உதயநிதி நடித்த 'நிமிர்' மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்த 'சம்டைம்ஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்