தடைக்கு பின் சமந்தாவுக்காக முதல்முறையாக குரல் கொடுக்கும் சின்மயி!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு சுமத்திய நிலையில் அவர் திடீரென டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் நீதிமன்றம் சென்ற சின்மயிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் மீண்டும் டப்பிங் யூனியனில் அவர் இணைத்து கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில் தடைக்கு பின் மீண்டும் டப்பிங் யூனியனில் இணைந்த சின்மயி, டப்பிங் செய்த முதல் படம் சமந்தாவின் 'ஓ பேபி'. இந்த படம் தெலுங்கில் உருவாகியுள்ள நிலையில் தற்போது இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமந்தாவுக்கு பின்னணி குரல் கொடுக்கின்றார் சின்மயி. சின்மயி குரலுடன் 'ஓ பேபி' படத்தின் தமிழ் டீசரும் தற்போது வெளிவந்துள்ளது

சமந்தா, லட்சுமி, ஊர்வசி, ராவ் ரமேஷ், ஐஸ்வர்யா, நாகசெளரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். மிக்கி ஜே.மேயர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

More News

விஜய்சேதுபதி பட வில்லனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களின் எண்ணிகையை

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாக டைட்டில் அறிவிப்பு

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன 'லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாக டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

விஷாலுக்கு ஓட்டு போட்டால் நமக்கு சூடு சொரணை இல்லை என்று அர்த்தம்: சேரன்

நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில்

நிர்வாண புகைப்பட விவகாரம்: மிரட்டிய ஹேக்கருக்கு அதிர்ச்சி அளித்த நடிகை!

நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டிய ஹேக்கருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடிகை ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

'கூர்கா' பட விழாவில் பாஜகவை கிண்டலடித்த கரு.பழனியப்பன்

யோகிபாபு நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார்.