வைரமுத்து பெரிய மனிதாரா? திலகவதி ஐபிஎஸ் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயி விரைவில் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்றும் வைரமுத்துவை விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? அல்லது பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்கக் கூடாது?
தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று வைரமுத்து கூறுகின்றார். சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு காலமா காரணமா? வைரமுத்து தன்னை ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக்கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாக பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்கு தான் இது.
சின்மயி விஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல்துறைக்கு செல்ல தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி விஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.
இவ்வாறு திலகவதி ஐபிஎஸ் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments