தேவதாசி விவகாரம்: தாயாருக்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

சமீபத்தில் பாடகி சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தேவதாசி முறையை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். தேவதாசி முறை என்பது இந்தியாவிற்கே சொந்தமானது என்றும் அது மிகச்சிறந்த சிஸ்டம் என்றும் அதை பெரியார்தான் சிதைத்தார் என்றும் அதனால் அவரை நான் மன்னிக்க மாட்டேன்’ என்றும் கூறியிருந்தார்

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பாடகி சின்மயி தேவதாசியாக ஆகவேண்டும் என சில நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார் அவர் கூறியதாவது: தேவதாசி முறையை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
எங்க அம்மாவுடைய கருத்துக:ஆ; என்ன தேவதாசி ஆக சொல்வது எந்த நியாயமும் இல்லை. அவங்க கருத்துக்கு அவங்க தான் பொறுப்பு. இருப்பினும் நான் அவங்களுக்காக மன்னிப்பு கேட்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

தேவதாசி முறையை ஒழிக்க அனைத்து மாதர் அமைப்புகளும் குரல் கொடுத்த நிலையில் சின்மயியின் தாயார் அதற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

இசைஞானிக்கு இணையான இசைக்கலைஞன் இல்லை: பாரதிராஜா புகழாராம்

இளையராஜாவும் பாரதிராஜாவும் கடந்த சில ஆண்டுகளாக கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்தாலும் சமீபத்தில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டது போல் தெரிகிறது.

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300..!

உத்திரபிரதேசத்தில் ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300.

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கிய பிரபல தமிழ் நடிகை: பெரும் பரபரப்பு

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துவரும் சஞ்சனா கல்ராணி தற்போது தமிழில் அருண்விஜய்யுடன் 'பாக்சர்' என்ற படத்திலும் விஜய் டிவி ராமர் நடிக்கும் 'போடா முண்டம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

கமலுக்கு எதிராக கௌதமியை களத்தில் இறக்குகிறதா பாஜக..?!

மோடி, பாஜக, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகத் தீவிரமாக கருத்துகளை கூறி வரும் கமலுக்கு எதிராக கவுதமியை பாஜக களம் இறக்கியுள்ளது.

கோலம் போட்டு கொள்கை பரப்பும் தமிழகம்..! #NoCAA

தங்களது வீட்டில் “NO CAA, NO NRC” என்ற வாசகங்கள் கொண்ட கோலங்களைப் போட்டு திமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.