18 வயது இளம்பெண் மீது காதல் கொண்டாரா வைரமுத்து? சின்மயி அதிர்ச்சி டுவீட்

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளம் மூலம் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி பலர் அவரிடம் பகிர்ந்து கொள்ளும் பாலியல் வன்முறை குறித்த தகவல்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சவுண்ட் எஞ்சினியராக பணிபுரிந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தன்னிடம் வைரமுத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் 18 வயதாக இருந்தபோது சவுண்ட் எஞ்சினியர் பணிக்காக சென்னை வந்தேன். வைரமுத்து அவர்களை அவருடைய அலுவலகத்தில் என் தாயாருடன் சென்று சந்தித்தபோது, ரஹ்மானிடம் அறிமுகம் செய்து எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினார். மேலும் என் அம்மாவின் மீது அவருடைய பார்வை தவறாக இருந்ததையும் நான் அப்போது கவனித்தேன்.

ஒருசில நாட்கள் கழித்து ஒருநாள் ரஹ்மானிடம் என்னை அறிமுகம் செய்தார். பின்னர் பலமுறை என்னிடம் தொலைபேசியில் பேசினார். தான் ஒரு கவிதை எழுதி வருவதாகவும், அந்த கவிதையை என்னை மனதில் நினைத்தே எழுதுவதாகவும், தன்மீது காதல் கொண்டிருப்பதாகவும் ஒருமுறை கூறினார். அப்போது அதிர்ச்சி அடைந்த நான், உங்களை நான் அப்பா போன்று நினைத்து பழகி வருகிறேன்' என்று அதிர்ச்சியுடன் கூறினேன். அதன்பின்னர் அவர் பலமுறை என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தபோதும் நான் செல்லவில்லை. தற்போது வைரமுத்துவை பற்றி பலர் தைரியமாக கூறி வரும் நிலையில் நானும் எனக்கு நடந்த இந்த கசப்பான அனுபவத்தை கூறுகின்றேன்' என்று கூறியுள்ளார்.

அனுமார் வால் போல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு வைரமுத்து வாய் திறந்தால் மட்டுமே முடிவு கிடைக்கும்