நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்: நெட்டிசனுக்கு சின்மயி ஆவேச பதில்!
- IndiaGlitz, [Friday,October 21 2022]
நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான், அது நம்ம ஊரு மக்களின் ரத்தத்திலேயே ஊறியது என்றும் வளர்ப்பும் அப்படி என்றும் சின்மயி தனது குழந்தை குறித்து கமெண்ட் செய்த ரசிகர் ஒருவருக்கு ஆவேசமாக பதில் அளித்த் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பது தெரிந்ததே. நயன்தாராவின் வாடகை குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சின்மயியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக வதந்திகள் பரவியது.
இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்து தான் இரட்டை குழந்தைகளை பெற்றதை உறுதி செய்தார்
இந்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன் ஒருவர், ‘வாழ்த்துக்கள் வைரமுத்து சார்’ என்று கூறியுள்ளார். இந்த கமெண்டுக்கு ஆவேசமாக சின்மயி பதிலளித்துள்ளார்
’தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த பதிவை செய்து உள்ளார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்திலேயே ஊறியது, வளர்ப்பும் அப்படி’ என்று கூறியுள்ளார்.