'கை போடுறதுக்கு தனியா காசு கொடுக்கணும்.. அபர்ணா விவகாரத்தால் ஆவேசமான சின்மயி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மலையாள திரைப்படம் ஒன்றின் பிரமோசனுக்கு நடிகை அபர்ணா பாலமுரளி சென்றபோது கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோள் மீது கையை போட முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவனை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த கமெண்ட்ஸ்களுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் சட்ட கல்லூரியில் ’தங்கம்’ என்ற மலையாள படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி உள்பட குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது மேடைக்கு வந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர், அபர்ணாவுக்கு கை கொடுத்தார். அதன் பிறகு அவர் அபர்ணாவின் தோளின் மீது கை போட முயன்றபோது அவர் அதை லாவகமாக தவிர்த்து மீண்டும் வந்து தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
இதனை அடுத்து தனது செயலுக்காக மன்னிப்பு கோரிய அந்த சட்டக் கல்லூரி மாணவன் மீண்டும் அபர்ணாவுக்கு கை கொடுக்க வந்த போது அபர்ணா அவருக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த விவகாரம் படக்குழுவினர் முன் நடந்து கொண்டிருந்த நிலையில் படக்குழுவினர் யாரும் அந்த மாணவனை கண்டிக்காமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு ஒரு சில நெட்டிசன்கள் மிகவும் மோசமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ‘அபர்ணாவின் தோளில் கை போட வேண்டும் என்றால் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவானது.
இந்த கமெண்ட்ஸ்களுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். பேஸ்புக்கில் இந்த மாதிரியான கேவலமான கமெண்ட்ஸ்களை பார்க்கும்போது மிகவும் பயமாக இருக்கிறது, இதுபோன்ற ஆண்களை நம்பித்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
A college student misbehaved with actress Aparna Balamurali during the promotion function of Thangam movie. @Vineeth_Sree I'm surprised about your silence 🙏 What the hell #Thankam film crew doing there.
— Mollywood Exclusive (@Mollywoodfilms) January 18, 2023
@Aparnabala2 #AparnaBalamurali pic.twitter.com/icGvn4wVS8
തോളില് കൈയ്യിടാന് ശ്രമം; അപര്ണ ബാലമുരളിയോട് മോശമായി പെരുമാറി വിദ്യാര്ഥി#AparnaBalamurali #vineethSreenivasan #Lawcollege pic.twitter.com/1EHgSioHXf
— OneIndia Malayalam (@thatsMalayalam) January 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com