மூடிட்டு போ! டுவிட்டர் பயனாளியை திட்டிய சின்மயி

  • IndiaGlitz, [Wednesday,October 17 2018]

கடந்த சில நாட்களாக வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விவாதம் நடந்து வருகிறது. இதுகுறித்து கேலியான விமர்சனங்களும் மீம்ஸ்களும் பதிவாகி வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர், 'தீபாவளிக்கு சின்மயி வெடினு ஒன்னு வந்துருக்காம்.. இப்ப பத்தவச்சா பதினஞ்சு வருசத்துக்கு அப்புறம் தான் வெடிக்குமாம்' என்று சின்மயி விவகாரம் குறித்து கேலியான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், 'எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்ச சர்வ நாசம், மூடிட்டு போ' என்று பதிலளித்தார்.