புதிய திரைப்படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்து: சின்மயி, கங்கை அமரனின் ரியாக்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்துவிற்கு கங்கை அமரன் மற்றும் சின்மயி காட்டிய ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ’பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு ’தடை உடை’ என்று பெயர் வைத்தேன் என்றும் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தேன் என்றும் இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள் என்றும், கொண்டாட்டங்களே வாழ்க்கை’ என்றும் பதிவு செய்திருந்தார் .
இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த பதிவு குறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது சமூக வலைத்தளத்தில் ’கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம், கண்ணன் நடுவினிலே’ என்று பதிவு செய்திருந்தார்.
அவர் எந்த அர்த்தத்தில் இந்த பதிவை செய்திருந்தார் என்பதை புரிந்து கொண்ட நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதேபோல் இந்த பதிவை பாடகி சின்மயியும் ரீட்வீட் செய்து இருந்தார். வைரமுத்துவின் பதிவிற்கு ரியாக்சன் காட்டிய சின்மயி மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.
கங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் .. கண்ணன் நடுவினிலே !!!! https://t.co/sMe6sO0Lpf
— gangaiamaren@me.com (@gangaiamaren) May 2, 2022
What can anyone do if the film industry keeps platforming him. That's all this system is. No wonder there will never be an ICC in Tamilnadu Film Industry
— Chinmayi Sripaada (@Chinmayi) May 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments