செக்ஸ் பொம்மைதான் எனக்கு சரியான ஜோடி… பாடிபில்டரைத் தொடர்ந்து இன்னொரு அதிசயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கஜகஜஸ்தானை சேர்ந்த பிரபல பாடிபில்டர் ஒருவர், தனது செக்ஸ் பொம்மையுடன் டேடிங் சென்று அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். இந்நிகழ்வு உலகம் முழுவதும் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சீனாவைச் சேர்ந்த ஷி தியான்ராங் எனும் நபரும் தனது செக்ஸ் பொம்மையை கொண்டாடி வருகிறார். மேலும் ரியல் பெண்களைவிட செக்ஸ் பொம்மைகளை சமாளிப்பது எளிது என்றும் கருத்து வெளியிட்டு இருக்கிறார். இந்தக் கருத்தால் அவர் கவனிக்கப்படும் மனிதராகவும் மாறி இருக்கிறார்.
மோச்சி எனும் செக்ஸ் பொம்மையுடன் வாழ்ந்து வரும் ஷி தியான்ராங் இந்திய மதிப்பில் கடந்த ஆண்டு அதை 1,13,400 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். தன்னுடைய பெரும்பாலான நேரங்களை மோச்சியுடன் தான் தற்போது கழித்து வருகிறாராம். அதோடு மோச்சிக்கு ஐபோனையும் அவர் பரிசு அளித்து இருக்கிறார். குளிக்க வைப்பது, அலங்காரம் செய்வது, விதவிதமான ஆடைகளை அணிய வைப்பது என்று ஷி தியான்ராங்கின் செயல்கள் பார்ப்போரை வியக்க வைத்து இருக்கின்றன.
அதோடு தன்னிடம் இருக்கும் செக்ஸ் பொம்மைகளிடம் அவர் அத்து மீறுவதில்லையாம். காரணம் பொம்மைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தனக்குத் தானே நெறிமுறைகளை பின்பற்றி வருகிறாராம். இந்நிலையில் உங்களுக்கு உண்மையான காதலி இல்லையா? எனக் கேட்டதற்கு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே நேரம் போய்விடும். ஆனால் செக்ஸ் பொம்மைகளிடம் இந்த பிரச்சனை இல்லை எனப் பதில் அளித்து வருகிறார். இவரது பதிலை சிலர் ரசித்தும் வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com