அமெரிக்க காவலில் சிக்கிக் கொண்ட சீனாவின் பெண் விஞ்ஞானி!!! தொடரும் பரபரப்பு???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அமெரிக்கா சீனாவின் மீது குற்றம்சாட்டத் தொடங்கியதில் இருந்தே ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு பிரிவாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் இருக்கும் சீனத் தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் காலி செய்து கொள்ளுமாறு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்தது. காரணம் சீனத் தூதரக அதிகாரிகள் மறைமுகமாக அமெரிக்காவில் உளவு வேலையைப் பார்ப்பதாகவும் இதனால் அமெரிக்காவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டத் தொடங்கியது. மேலும், அறிவுசார் வளங்களை சில அதிகாரிகளே திருடுவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டு இருந்தது.
அமெரிக்காவின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா நேற்று செங்டுவில் உள்ள அமெரிக்காவின் துணை தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது. இருநாடுகளும் இப்படி குடுமிபிடி சண்டையில் இருக்கும்போது சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி தற்போது அமெரிக்கா போலீஸ் காவலில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் திங்கள் கிழமையன்று நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனாவின் துணை தூதரகத்தில் ஜுவான் டாங் என்ற பெண் விஞ்ஞானி அமெரிக்கா காவல் துறையிடம் சரணடைந்து இருக்கிறார். இவர் மீது கடந்த ஜீன் 26 ஆம் தேதி தவறான தகவல் கொடுத்து அமெரிக்காவின் விசாவை பெற்று நாட்டுக்குள் நுழைந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஜுவான் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். ஆனால் அமெரிக்கா வருவதற்கு விசா பெறும்போது சீன இராணுவத்தில் பணியாற்றினேன் என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து அமெரிக்கா அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிரக் காட்டத் தொடங்கியுள்ளனர்.
ஜுவான் டாங் ஒருவேளை இராணுவ உறவை மறைத்துக் கொண்டவராக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப் பட்டு இருக்கிறது. இவர் சீனாவின் தூதர அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளதால் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் சீன வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிட வில்லை என்பது மேலும் நிலைமையை பதற்றம் அடைய செய்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments