அமெரிக்க காவலில் சிக்கிக் கொண்ட சீனாவின் பெண் விஞ்ஞானி!!! தொடரும் பரபரப்பு???

  • IndiaGlitz, [Saturday,July 25 2020]

 

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அமெரிக்கா சீனாவின் மீது குற்றம்சாட்டத் தொடங்கியதில் இருந்தே ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு பிரிவாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் இருக்கும் சீனத் தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் காலி செய்து கொள்ளுமாறு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்தது. காரணம் சீனத் தூதரக அதிகாரிகள் மறைமுகமாக அமெரிக்காவில் உளவு வேலையைப் பார்ப்பதாகவும் இதனால் அமெரிக்காவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டத் தொடங்கியது. மேலும், அறிவுசார் வளங்களை சில அதிகாரிகளே திருடுவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டு இருந்தது.

அமெரிக்காவின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா நேற்று செங்டுவில் உள்ள அமெரிக்காவின் துணை தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது. இருநாடுகளும் இப்படி குடுமிபிடி சண்டையில் இருக்கும்போது சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி தற்போது அமெரிக்கா போலீஸ் காவலில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் திங்கள் கிழமையன்று நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார் எனவும் செய்திகள் கூறுகின்றன.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனாவின் துணை தூதரகத்தில் ஜுவான் டாங் என்ற பெண் விஞ்ஞானி அமெரிக்கா காவல் துறையிடம் சரணடைந்து இருக்கிறார். இவர் மீது கடந்த ஜீன் 26 ஆம் தேதி தவறான தகவல் கொடுத்து அமெரிக்காவின் விசாவை பெற்று நாட்டுக்குள் நுழைந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஜுவான் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். ஆனால் அமெரிக்கா வருவதற்கு விசா பெறும்போது சீன இராணுவத்தில் பணியாற்றினேன் என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து அமெரிக்கா அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிரக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

ஜுவான் டாங் ஒருவேளை இராணுவ உறவை மறைத்துக் கொண்டவராக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப் பட்டு இருக்கிறது. இவர் சீனாவின் தூதர அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளதால் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் சீன வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிட வில்லை என்பது மேலும் நிலைமையை பதற்றம் அடைய செய்திருக்கிறது.

More News

2 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு: குணமானோர் எண்ணிக்கையும் உயர்வதால் மக்கள் நிம்மதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5000, 6000 என அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 7000 பேர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள விஷால்! பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

லாவண்யாவுடன் திருமணம், தமன்னாவுடன் தொடர்பு: பரபரப்பு பேட்டி அளித்த நடிகர் கைது!

நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ததாகவும் அவர் மூன்று முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்ததாகவும் தமன்னா உள்பட பல நடிகைகள் என்னுடன் தொடர்பு இருந்ததாகவும்

விடுதலைச்சிறுத்தைகளின் புகாருக்கு பதிலடி கொடுத்த காயத்ரி!

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை காயத்ரி ரகுராமன்,

இந்தியாவிற்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் சீனா!!! பயோ வெப்பன் தயாரிப்பதாகவும் பரபரப்பு!!!

இந்திய-சீன எல்லைப் பிரச்சனைக்கு இடையில் இந்தியாவிற்கு எதிராக கூட்டணி அமைக்க சீன முயற்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.