சாவுங்கடா..! மற்றவர்களுக்கும் நோய் பரப்பும் நல்லெண்ண சீனர்கள். அதிர்ச்சி வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரசானது பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவித நாவல் கொரோனா வைரஸாக இருந்ததால் ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்ட சீன அரசு பின்னர் அதற்கான விலையாக பல மனித உயிர்களைக் காவு கொடுத்தது.
இன்று உலகம் முழுக்க 98,436 பேர் கொரோணா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,387 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் எதிப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்.. முதியவர்கள்.. குழந்தைகள் அதிகமாக உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஹாங்காங், கொரியா தற்போது இந்தியா என பல நாடுகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் வந்த பின் கட்டுப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது. காற்றின் மூலம் பரவுவதால் பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ள அறிந்து கொல்லப்பட்டார்கள். மேலும் ஒருவரை ஒருவர் தொட்டுக்க கொள்வது மூலமாகவும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் மக்கள் கை குலுக்கிக் கொள்ளவோ பிற பொருட்களை தொட்டாலும் அடிக்கடி கை கழுவிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் மற்றவர்களுக்கும் அதை பரப்பும் நல்லெண்ணத்துடன் பொது இடத்தில் எச்சில் துப்புவது, தங்கள் கைகளால் தொட்டு லிஃப்ட் பட்டண்களில் தேய்த்து வைப்பது போன்ற செயல்களின் சிசிடீவி காட்சிகள் வீடியோவாக வெளிவந்துள்ளது. இது போன்ற செயல்கள் பிறருக்கு நோய் பரப்பும் என்பது மட்டுமல்லாமல் உயிருக்கே உலை வைத்துவிடும். ஏனென்றால் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தானே நமக்கும் நடக்கும். வாழ்க்கை ஒரு வட்டம் தானே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments