அமெரிக்காவின் லட்சணம் இதுதான்… செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் ஊடகம்!

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்து சீன அரசு ஊடகம் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பிருந்ததைப் போலவே அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்றுள்ளதாக விமர்சித்து இருக்கிறது.

மேலும் 4 அதிபர்கள், 20 ஆண்டுகள், 20 ட்ரியல்லன் டாலர் பணம் மற்றும் 2,300 இராணுவ வீரர்களின் மரணத்திற்கு பின்னால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை என்றும் கடுமையாக கேலி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பயரங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் குவிந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் செயல்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருந்ததோடு வாக்கெடுப்பு அரசியலுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தியதோடு பெண்களுக்கான கல்வி மற்றும் தனியுரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை விலகிய வெறும் 10 தினங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தாலிபான்களிடம் இருந்து மீட்ட ஆப்கானிஸ்தானை தற்போது மீண்டும் தாலிபான்களிடமே விட்டுச்சென்றதுதான் அமெரிக்காவின் லட்சணம் என்று சீன அரசு ஊடகமான ஷினுபா கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

மேலும் அமெரிக்கப்படை விலகிய பிறகு தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதப்படை இரட்டை இலக்கமாக அதிகரித்து இருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தாலிபான்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவம் நடத்திய போரில் கிட்டத்தட்ட 1 லட்சம் ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் 1 கோடி பேருக்கும் அதிகமாக காயம் அடைந்தனர் என்றும் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு அமெரிக்காவை கடுமையாக வெறுப்பேற்றி வருகிறது. 

When you feel life is going nowhere, just think: with
4 U.S. presidents
20 years
2 trillion dollars
2,300 soldiers' lives...
the regime of Afghanistan changes from Taliban to... Taliban pic.twitter.com/ZHI2OaIgxk

— China Xinhua News (@XHNews) August 22, 2021

More News

கடவுளாக மாறிவிட்ட US இராணுவ வீரர்கள்… ஆப்கனில் நெஞ்சை உலுக்கும் காட்சி!

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டம் தற்போது தாலிபான்களால் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கவுண்டமணியுடன் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்? வைரல் புகைப்படம்

தமிழ் சினிமா காமெடியில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் கவுண்டமணியுடன்

சென்னையின் டாப் தொழிலதிபர்களுடன் இணைந்த கமல்ஹாசன்!

சென்னையின் டாப் தொழிலதிபர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு கமல்ஹாசன் தனது இருப்பிடத்தை மாற்றிக் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து விலகியது ஏன்? பிரபல நடிகையின் சகோதரர் விளக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்பதும் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது

நடிகை சமந்தாவிற்கு நயன்தாரா படக்குழு கொடுத்த அசத்தலான சர்பரைஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.