கொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா??? பரபரப்பை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
எந்த நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகியது என்ற விவாதம் உலகம் முழுவதும் ஒரு மூன்றாம் உலகப் போரையே ஏற்படுத்தும் அளவிற்கு பெரும் சிக்கலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு கொரோனா வைரஸ் முதலில் இந்தியாவின்தான் தோன்றி இருக்க வேண்டும். அங்கு கோடை பருவகாலத்தின் போது இந்த வைரஸ் முதன் முதலாக தோற்றம் பெற்றிருக்கலாம். அந்த வைரஸின் தாக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற வாதத்தை எழுப்பி இருக்கின்றனர். இந்தத் தகவல் தற்போது கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாண இறைச்சி கடையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற தகவலை சீன விஞ்ஞானிகள்தான் மற்ற உலக நாடுகளுக்கு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு ஒன்று கொரோனா வைரஸின் தோற்றம் எது என்பதைக் குறித்து தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு பரபரப்பான தகவலை வெளியிட்டு வருகின்றனர். அதில் கொரோனா வைரஸின் தோற்றம் சீனாவாக இருக்க முடியாது, அது இந்தியாவில் உருவாகி மற்ற உலக நாடுகளுக்கு பரவி இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வைரஸ் விலங்குகளை சுத்தம் செய்த அசுத்தமான நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இந்த நிகழ்வுகள் எல்லாம் கடந்த ஆண்டு கோடைப் பருவத்திலேயே நடந்து முடிந்து இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக நாடுகள் சீனா மீது கடுமையான குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவின் தோற்றம் சீனா அல்ல, இந்தியாதான் என விஞ்ஞானிகள் கூறி இருப்பதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மேலும் பங்களாதேஷ் அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா இத்தாலி, செக் குடியரசு ரஷ்யா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் கிடைத்து இருப்பதாக அந்தக் குழு கூறி இருக்கிறது. அதிலும் இந்தியா மற்றும் பங்களாதேஷில் பலவீனமான கொரோனா வைரஸின் பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால் அங்கு முதலில் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அந்த விஞ்ஞானிகள் உறுதியாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தத் தகவல் விஞ்ஞானிகள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout