விடாமுயற்சிக்கு அடையாளம்… 27 ஆவது முறையாக நுழைவுத் தேர்வு எழுதிய கோடீஸ்வரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் வசித்துவரும் 56 வயதான நபர் 27 ஆவது முறையாக அந்நாட்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தோல்வி அடைந்திருக்கும் தகவல் பலரையும் அசர வைத்திருக்கிறது.
பள்ளிப் படிப்பை முடித்து சீனப் பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கவ்கவ் எனப்படும் இந்த நுழைவுத்தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் சீனாவில் வசித்துவரும் லியாங் ஷி எனும் நபர் தற்போது 27 ஆவது தடவை தேர்வெழுதி தோல்வி அடைந்திருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற இந்த தேர்வில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் இணைந்து படிக்க வேண்டும் என விரும்பிய லியாங்ஷி தனது 16 ஆவது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கவ்கவ் எனும் நுழைவுத் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால் அதில் வெற்றியடையாத நிலையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். தொடர்ந்து மர வேலைகளை செய்துவந்த இவர் ஒரு பக்கம் நுழைவு தேர்வு எழுதிக்கொண்டே தனது வருமானத்தையும் ஈட்டிவந்துள்ளார்.
பின்னர் 1990 களில் கட்டுமானப் பொருள்கள் தொழிலில் ஈடுபட்ட வந்த அவர் பெரிய பணக்காரராகவும் மாறியும் இருக்கிறார். இப்படி தொழிலுக்கு நடுவே நுழைவுத்தேர்வின் மீதும் அக்கறை காட்டிவரும் அவர் தேர்வு எழுதப் போகும் காலங்களில் குடிப்பது, படம் பார்ப்பது போன்ற எந்த பொழுதுபோக்கு அம்சங்களிலும் கவனம் செலுத்த மாட்டாராம்.
இந்நிலையில் 1983 இல் ஆரம்பித்த தனது நுழைவுத் தேர்வு பயணத்தில் இதுவரை 27 முறை லியாங்ஷி தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தோல்வியை மட்டுமே சந்தித்துவந்த இவர் இந்த ஆண்டும் 750 புள்ளிகளுக்கு 424 எடுத்திருந்தால் ஒருவேளை தனது தேர்வில் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால் 34 புள்ளிகள் குறைவாகப் பெற்றதால் தற்போது பல்லைக்கழக கனவு வீணாகியிருக்கிறது.
பெரிய பணக்காரராக இருந்தும் 56 வயதில் விடாமுயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதிவந்த லியாங் ஷி குறித்த தகவல் தற்போது இணயைத்தில் கவனம் பெற்றிருக்கும் அதேவேளையில் அடுத்த ஆண்டு இவர் நுழைவுத்தேர்வில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments