ஒரு ஆப்பிள் போனை வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றவர் கதி! பதைக்க வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சந்தைக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும். காரணம் அதன் விலை. ஆனால் பயன்பாட்டை பொறுத்த வரையில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள்தான் உலகம் முழுவதும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. எனவே எப்பாடு பட்டாலும் பரவாயில்லை, ஒரு ஆப்பிள் போனை வாங்கிவிட வேண்டும் என்பது பல இளைஞர்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
அப்படி ஆசைப்பட்ட வாலிபர் ஒருவர் சீனாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னுடைய சிறுநீரகம் ஒன்றை விற்று ஒரு ஆப்பிள் போனையும் ஆப்பிள் ஐபேடையும் விலைக்கு வாங்கி இருக்கிறார். ஆனால் அவருடைய இன்னொரு சிறுநீரகம் தற்போது செயலிழந்து விட்டால் அவரின் நிலை கவலைக்கிடமாக ஆகிவிட்டது என நியூஸ்.காம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
சீனாவில் வாங் ஷாங் எனும் 17 வயது சிறுவன் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய போனை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதற்காக தன்னுடைய வலது சிறுநீரகத்தை கள்ளச்சந்தையில் விற்று இருக்கிறார். அதன் மூலம் வாங் ஷாங்கிற்கு 4,000 ஆஸ்திரேலிய டாலர் கிடைத்து இருக்கிறது. அந்தப் பணத்தை வைத்து ஒரு ஆப்பிள் போன் மற்றும் ஒரு ஐபேடை மட்டுமே வாங்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாங் ஷாங் கள்ளச்சந்தையில் தன்னுடைய சிறுநீரகத்தை விற்றதால் அவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாகவும் தற்போது இன்னொரு சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் இதுபோன்ற கள்ளச்சந்தைகள் நிரம்பி வழிவாதகாவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஒரு போனை வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்று அதனால் இன்னொரு சிறுநீரகமும் செயலிழந்துவிட்ட செய்தி தற்போது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout