வரி ஏய்ப்பு விவகாரம்: பிரபல நடிகைக்கு ரூ.338 கோடி அபராதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரியை ஏய்ப்பு செய்த பிரபல நடிகை ஒருவருக்கு ரூபாய் 338 கோடி அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகை ஜெங் ஷூவாங். இவர் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு டிவி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது மிகப் பெரிய தொகை ஒன்றை சம்பளமாக பெற்றார். இந்த சம்பளத்திற்கு உரிய வரியை அவர் செலுத்தவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில் தொலைக்காட்சி தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது ஜெங் ஷூவாங் இரண்டு ஆவணங்களை தயார் செய்ததாகவும் ஒரு ஆவணத்தில் தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போன்று குறிப்பிட்டு அதனை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தார் என்றும் இரண்டாவது ஆவணத்தில் அவர் தனது உண்மையான வருமானத்தை கொண்டு இருப்பது போன்றும் இருந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து குறைவாக வரி செலுத்தி மோசடி செய்த நடிகை ஜெங் ஷூவாங்கிற்கு ரூபாய் 338 கோடி அபராதம் விதித்து ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com