பட்டமளிப்பு விழாவில் முக்கவசம் அணியாத 11,000 மாணவர்கள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில் சீனாவில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் 11 ஆயிரம் மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரேனா வைரஸ் கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸால் உலகமே இன்றுவரை அல்லாடிக் கொண்டு இருக்கும்போது சீனாவில் தற்போது இந்த வைரஸ் முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் இயல்வு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள நார்மல் பல்கலைக் கழகத்தில் தற்போது பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் கலந்து கொண்ட 11 ஆயிரம் மாணவர்கள் முகக்கவசம் அணியவில்லை. அதோடு எந்த சமூக இடைவெளியும் பின்பற்ற வில்லை. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்த நம்மூர் நெட்டிசன்கள் தற்போது கோபத்தில் கொதிக்க துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.