விண்வெளித் துறையில் சீனாவின் புதிய சாதனை!!! பூமிக்கு திரும்பிய புதிய விண்கலம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பல வருடங்களாக சீனா ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை இயக்குவதற்கும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்ப பலக்கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் முதன்மாதிரியாக கடந்த செவ்வாய்கிழமை அன்று சீனா விண்வெளிக்கு ஒரு விண்கலத்தை அனுப்பி வைத்தது என்பதும் குறிபிடத்தக்கது. தரை இறங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு (வெள்ளிக்கிழமைக்கு) முன்னரே இந்த விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியதாக தற்போது சீனாவின் Manned Space நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
ஒரு சரக்கு காய்ஸ்யூலுடன் பொருத்தப்பட்ட விமானத்தில் புதிய வகை கேரியர் ராக்கெட்டுடன் விண்கலம் சீனாவின் தெற்கு ஹைனான் தீவிலுள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் இரண்டு நாட்களில் 19 மணி நேரம் விண்வெளியின் சுற்றுப்பாதையில் இருந்ததாகவும் பல சோதனைகளை மேற்கொண்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விண்கலம் உபகரணங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முதற்கட்ட சோதனையில் தற்போது சீனா வெற்றிப் பெற்றிருக்கிறது.
இதன் அடுத்தக் கட்ட சோதனையில் விண்வெளி வீரர்களை அனுப்ப இருப்பதாகவும் படிப்படியாக ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் 2020 ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விண்வெளி துறையில் சீனா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது எனத் தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இதுபற்றி, விண்வெளி ஆய்வு பற்றிய செய்திகளை வெளியிடும் Space News “சீனா விண்வெளி நிலைய திட்டங்களுக்கான பணிகளில் முன்னேறி வருகிறது. வரும் 2021 ஆம் ஆண்டில் இந்தக் கனவு நிறைவேறும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறது.
விண்வெளியின் உயர் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக தரையிறக்குவது, குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள பூமிக்கு அப்பால் விண்வெளி வீரர்களை அனுப்புவது போன்ற பணிகளில் தீவிரமாக சீனா இருப்பதாகத் தற்போது பல நாடுகளும் பரபரப்பாக பேசி வருகின்றன. முன்னதாக நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமே நடத்திக் காட்டிய இந்த ஆய்வுகளை தற்போது சீனாவும் வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறது. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சோதனையில் ஈடுபட்டுள்ளன. தற்போது சீனா நடத்தியிருக்கும் வெற்றிகரமான விண்கலச் சோதனையை அடுத்து சீனாவும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வில் மேற்கொள்ள இருக்கிறது. சமீபகாலமாக சீனா விண்வெளி திட்டத்தில் அதிக முதலீட்டை செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout