ஒரு அறிவிப்புகூட இல்லாம 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சா??? அலற வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் ரஷ்யாவின் ஸ்புட்னிக், அமெரிக்காவின் மாடெர்னா மற்றும் ஃபைசர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலையின் தடுப்பூசி போன்றவை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த மருந்துகளை தன் நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டி பல நாடுகள் தற்போது புதுப்புது ஒப்பந்தங்களை போட்டு வருகின்றன.
ஆனால் சீனா அரசாங்கம் சத்தமே இல்லாமல் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி விட்டோம் என்ற தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இதனால் விஞ்ஞானிகளுக்கு இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினோபார்ம் மற்றும் சீனோவேக் எனும் இரு கொரோனா தடுப்பூசிகளைப் பற்றி தகவல் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தத் தடுப்பூசி பற்றிய ஆய்வு தரவுகளை சீன அரசாங்கம் வெளியிட வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மேலும் சீனா தடுப்பூசி மீதான 3 ஆம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ளாமலேயே மனிதர்களுக்கு செலுத்த முற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டு இருந்தது. இப்படி சீனாவின் கொரோனா தடுப்பூசி குறித்த குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாகச் சீனா தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து சீனோபார்ம் மருந்து நிறுவனத்தின் தலைவர் லியு ஜிங்ஷென் “அவசர பயன்பாட்டுக்காக ஏற்கனவே சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவருக்கு கூட எந்த சிக்கலும் ஏற்படவில்லை. சிலருக்கு அறிகுறிகள் மட்டுமே ஏற்பட்டு உள்ளன. ஆராய்ச்சியில் தொடங்கி சோதனை உற்பத்தி அவசர பயன்பாடு வரை உலகிலேயே நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார். இத்தகவல் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments